தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். பல முன்னணி நடிகர்களோடு நடித்து, தற்போது பிரபலமாக உள்ள ரோபோசங்கர், ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார். தற்போது திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார்.
தன்னுடைய உடல் நலப் பாதிப்பு குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த ரோபோ ஷங்கர், என்னிடம் சில தவறான பழக்கங்கள் இருந்தது. அதனால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு உடல் எடை குறைந்தது. தற்போது அந்த பழக்கங்களை நிறைத்துவிட்டேன் என்றும் நீங்களும் அதை நிறுத்திக்கொள்ளுங்கள். குடும்பம் , நண்பர்கள் , உடற்பயிற்சி , ஆராக்கியமான உணவுமுறை , அன்பை பரிமாறிதல் என சந்தோசமாக வாழுங்கள். உடலை கெடுத்து கொள்ளும் அளவுக்கு கெட்ட பழக்கங்களை தவிருங்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா இது குறித்து பேசியுள்ளார். அதாவது, என் அம்மாவுக்கு இதே நிலைமை தான் இருந்துச்சு. இரண்டு முறை இந்த பிரச்சனை வந்தது. எனவே தான் அவரின் உடல் நிலை ரொம்ப மோசமாகியது. எனவே தயவு செய்து இந்த மஞ்சள் காமாலை நோய் யாருக்கு வந்தாலும் உடனடியாக சென்று தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என வனிதா அறிவுரை கூறியுள்ளார்.