விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:57 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளைபொருட்களை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அத்தியாவசியமான விவசாயப் பொருட்கள் விற்பனை செய்ய முடியாமலும் அது கொள்முதல் செய்வதும் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் அதனால் நஷ்டமடைவதாகவும்  தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று,  உயர் நீதிமன்றம், ஊரடங்கால் நஷ்டமடைந்துள்ள  சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி போன்ற உதவிகளை அரசு அறிவிக்க வேண்டுமென  உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்