அரசுப்பள்ளி ஆசிரியரின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா?? பள்ளிக்கல்வித் துறை கேள்வி

Arun Prasath
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:41 IST)
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா? என பள்ளிக்கல்வித் துறை கேள்வி எழுப்பியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா? என்பது குறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி மேலாண்மை இணையத்தளத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் குறித்த விவரங்களை உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக EMIS இணையத்தளத்தில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பக்கத்தில் ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதிலளிக்கவேண்டும். மேலும் திருமணம் ஆகாதவர்கள், அல்லது அவர்களது பிள்ளைகள் கல்லூரியில் படிப்பவர்கள் என்றால் அந்த கேள்விக்கு பொருந்தாது என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், இணையத்தளத்தில் உடனடியாக தங்கள் பிள்ளைகளை பற்றிய விவரங்களை பதிவு செய்து அதை பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்