வைரலான வீடியோ - ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்த போக்குவரத்து துறை

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (12:30 IST)
திண்டுக்கல் அரசுப் பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்துகள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை எனப் புகார் செய்த அரசுப் பேருந்து ஓட்டுனரை போக்குவரத்துத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார். கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் போது பணியில் இருந்த விஜயகுமார் ஒட்டுனர் இருக்கைக்கு அருகில் உள்ள ஜன்னல்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மழை மழைச் சாரல் உள்ளே வருவதாகவும் இரவு நேரப் பணியின் போது மழையில் நனைந்து கொண்டே ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளதென்றும் இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் அருகில் அமர்ந்திருந்த பயணியிடம் புலம்பி இருக்கிறார்.

இதை தனது பொபைலில் வீடியோ எடுத்த அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து தற்போது அந்த ஓட்டுனர் விஜயகுமார் மீது மாவட்ட போக்குவரத்துத் துறை பயணியிடம் பேசிக்கொண்டே பேருந்து ஓட்டியதற்காக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்