10 சப்ஜெக்டில் ஃபெயில்: லூசு போல் திரிந்த என்ஜினியரிங் மாணவி

திங்கள், 8 அக்டோபர் 2018 (08:36 IST)
சென்னையில் 10 சப்ஜெக்டில் ஃபெயில் ஆனதால் என்ஜினியரிங் மாணவி மனநலம் பாதித்த நிலையில் தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.
 
சென்னை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில் சந்தேகிக்கும்படி ஒரு பெண் நீண்ட நேரமாக மனநலம் பாதித்த பெண் போல சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அந்த மாணவியை பிடித்து விசாரித்தனர். ஆனால் அந்த பெண் ஏதும் பதில் கூறாமல் பெனாத்திக் கொண்டிருந்தார்.
 
இதனையடுத்து சிட்லபாக்கம் பெண் போலீஸ் அதிகாரி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
 
போலீஸார் அந்த மாணவி குறித்து கல்லூரியில் விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. மாணவி 10 சப்ஜெக்டில் ஃபெயில் ஆனதால் மன அழுத்தம் ஏற்பட்டு ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து  போலீஸார் மாணவியின் உறவினர் வீட்டில் மாணவியை ஒப்படைத்துள்ளனர். அவரது தந்தை வந்து மகளை வீட்டிற்கு அழைத்து செல்வார் என தெரிகிறது. மாணவியின் தந்தை போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்