இன்று தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய "தை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள்" நல்வாழ்த்துகள்!! #HappyPongal
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக கட்சி தலைவருமான ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், சாதி, மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உணர்வைப் பெறும் வகையில் சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். #Pongal2020
இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றி, புத்துணர்வு பெறுவோம். அனைவருக்கும் #தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், அநீதி,அடக்குமுறை,பசி,பட்டினி,ஊழல், லஞ்சம்,சாதீய இழிவு,தீண்டாமை, பெண்ணடிமை, மது மதப்போதை, பாலியல் சுரண்டல்,ஏற்றத்தாழ்வு, நிலவளச்சுரண்டல், உலகமய ஏகாதிபத்திய பெருங்கொள்ளைக்கு எதிராக தமிழர் நலனுக்காக, ஒற்றுமைக்காக தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.. என பதிவிட்டுள்ளார்.
தமிழ்திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ,மண் - விண் - மனிதர் - விலங்கு நான்கையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது தமிழர் திருநாள். இது நம் பெருமிதம்; அனைத்து மதம் கடந்த ஆதி அடையாளம்.