தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு! ஒரே நாளில் ரூ.160 உயர்ந்தது

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (16:59 IST)
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு பவுன் 31 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையான நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற வாய்ப்பு இல்லை என்ற செய்தி வெளியானதும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது
 
இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புத்தாண்டு தினத்தில் இருந்து உயரத்தொடங்கிய தங்கத்தின் விலை ஜனவரி 2ம் தேதி ஒரு சவரன் ரூ.28,880க்கு விற்பனையானது. அதற்கு மறுநாளே அதாவது ஜனவரி 3ம் தேதி 640 அதிகரித்து, ரூ.30,520க்கு விற்பனையானது. அதன்பின்னர் ஜனவரி 4, 5ம் தேதிகளில் 30,656க்கும் விற்பனையானது. ஜனவரி 6ம் தேதி 31168க்கும் விற்பனையானது
 
இந்த நிலையில் ஜனவரி 7ம் தேதி தங்கம் விலை குறைந்து 30904க்கும் ஜனவரி 9ம் தேதி ரூ.30440க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மீண்டும் சவரன் ஒன்றுக்கு ரூ.160 தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்