ஒரே நாளில் ரூ.240 உயர்ந்த தங்கம் விலை!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:29 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 30ம், சவரன் ஒன்றிற்கு ரூ 240ம் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 30 உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 4458.00 என்றும் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 35664.00 என்றும் விற்பனையாகி வருகிறது. இதே தங்கம் நேற்று ஒரு கிராம் ரூபாய் 4428.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 35424.00 எனவும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4822.00 எனவும் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 38576.00 எனவும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்றைவிட இன்று வெள்ளி ஒரு கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 68.60 எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 68600.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்