நீரஜ் சோப்ராவின் படம் சாதனைப் படம்- பிரபல இயக்குநர்

சனி, 14 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நிலையில்  அவரது சாதனை குறித்த படம் தயாரிக்க உள்ளதாகப் பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார். அதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்டு 7ம் தேதியை ”ஈட்டி எறிதல்” நாளாக கொண்டாட இந்திய தடகள சம்மௌனம்முடிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நீரஜ் சோப்ரா உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

எனவே, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் சில நாட்களுக்கு முன் ரோரஜ் சோப்ரா படம் குறித்து ஒரு பதிவிட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர் அருண்ரெய் தோடார் நீரஜ் சோப்ராவின் சாதனையைப் போற்றும் வகையில் படம் தயரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இந்தியாவில் பயோ பிக்  படங்களில் ந்லல வரவேற்பை பெரும் நிலையில், இப்படமு மக்களிடம் வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்