மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவாரூர் பல்கலை ஒரு மாதம் விடுமுறை

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (20:29 IST)
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளது. பேருந்து தீ வைப்பு, ரயில்கள் தீவைப்பு பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் என போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக இந்தியா முழுவதுமிருந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
 
இதனை அடுத்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் ஜனவரி 20 வரை விடுமுறை என பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கவே இந்த விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவர்கள் போராட்டம் முடங்குமா? நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்