அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் இலவச பயிற்சி !

திங்கள், 17 ஜூன் 2019 (20:47 IST)
கரூரில், மத்திய, மாநில அரசுகளில் பணிவாய்ப்பை பெறும் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றனர்.
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மத்திய,மாநில அரசுகளில் பணி வாய்ப்பை பெறும் தேர்விற்க்கான இலவச பயிற்சி முகாம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இந்நிகழ்வில் 2019-ம் ஆண்டு டி.என்.பி.சி. குரூப் 1-தேர்வில் முதன்மை இடத்தை பிடித்த டி.எஸ்.பி.திருமதி ஆனந்தி வினோத்குமார் கலந்து கொண்டு அரசு தேர்வில் வெற்றி பெறுவதற்க்கான வழிமுறைகளை எடுத்து கூறினார்.
 
இந்நிகழ்வில்., யு.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், டி.என்.பி.சி. குரூப் 1,2 மற்றும் 4- ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சியும் மற்றும் எஸ்.எஸ்.சி.எனப்படும் ரயில்வே வங்கி தேர்விற்க்கான பயிற்சியும் மெட்ராஸ் அகாடமி சிவில் சர்வீஸ் சார்பில் இலவசமாக முதன் முதலாக கரூரில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
இது குறித்து பயிற்சி வகுப்பை நடத்தும் அமைப்பின் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது,நேர்மையான,திறமையான அதிகாரிகளை உருவாக்கி அவர்களை ஆட்சியாளர்களாக உருவாக்குவதே எங்களின் இலக்கு. 
 
இதற்க்காகவே கரூரில் முதன் முதலாக இந்த அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் பயிற்சி வகுப்பை இலவசமாக துவக்கி உள்ளோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்