கரூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக்க எம்.ஆர்.விஜயபாஸ்கர் மும்முரம்

சனி, 15 ஜூன் 2019 (20:16 IST)
கரூர் மாவட்டத்தில், அமராவதி, காவிரி, நொய்யல் உள்ளிட்ட 5 ஆறுகள் ஓடினாலும், வெயிலின் கொடுமையினாலும், பருவ மழை பொய்த்ததாலும், தண்ணீர் வறண்டு காணப்படுகின்றது. 
இந்நிலையில், மாவட்டத்தில் ஆங்காங்கே மரங்கள் இல்லாததையடுத்து தான் இந்த நிலை என்பதை, பல்வேறு மக்கள் உணர தொடங்கியதையடுத்து, கரூர் மாவட்ட நிர்வாகமே, கடந்த சில தினங்களாக, தீவிரமாக மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று கரூர் அடுத்த செட்டிப்பாளையம், கருப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரக்கன்றுகளை நடும் பணியினை, துவக்கி வைத்தார். 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும், அவர்களுக்கு இரு சக்கர வாகனங்களையும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்