நாட்டை விட்டு ஓடிய அதிபர்! மடகாஸ்கர் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்! - Gen Z புரட்சியால் வந்த வினை!

Prasanth K

புதன், 15 அக்டோபர் 2025 (08:54 IST)

மடகாஸ்கர் நாட்டில் ஏற்பட்ட ஜென் ஸீ புரட்சியால் அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடியதால் ஆட்சி கவிழ்ந்தது.

 

நேபாளம், இந்தோனேஷியாவை புரட்டிப் போட்ட ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் மடகாஸ்கர் நாட்டிலும் சூடு பிடித்தது. ஊழல் ஆட்சி, வறுமை, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளும் அதுபர் ஆண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 6 பேர் பலியானார்கள்.

 

அதை தொடர்ந்து போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் ஜென் ஸீக்கு ராணுவமும் தனது ஆதரவை தெரிவித்தது. இதனால் அதிபர் ஆண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில், மடகாஸ்கர் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

 

நேபாளத்தில் புரட்சி நடந்தபோது இளைஞர்களே தங்களுக்கான அடுத்த பிரதமரை தேர்வு செய்தனர். ஆனால் மடகாஸ்கரில் இளைஞர்கள் போராட்டத்தை பயன்படுத்தி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்