கரூர் பெருநகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு பகுதிகளான மக்கள் பாதை , பழைய திண்டுக்கல் சாலை மற்றும் லைட்டவுஸ் கார்னர் பகுதிகளில் சுமார் 2 மாத காலத்திற்க்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கரூர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
இதனை அலட்சிய போக்கோடு கண்டுகொள்ளாத நகராட்சி பொருப்பாளர் மற்று பொறியாளர் ராஜேந்திரன் புகார் அளித்தவர்களை அலைகழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் கரூர் – பழைய திண்டுக்கல் சாலையில் திடீர் கழிவு நீரருடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியளால் அப்பகுடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத்து.