கரூர்: குளித்தலை அருள்மிகு ஸ்ரீ நீலமேகப்பெருமாள் ஆலய திருவிழா!

கரூர் அருகே குளித்தலை அருள்மிகு ஸ்ரீ நீலமேகப்பெருமாள் ஆலய வைகாசி திருவிழாவினை முன்னிட்டு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் அருகே குளித்தலை அருள்மிகு நீலமேக பெருமாள் திருக்கோவில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல்  நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
குளித்தலை அருள்மிகு கமலநாயகி சமேத நீலமேகப் பெருமாள் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவானது 12-ந்தேதி வரை நடைபெறும். இதில் ஒவ்வொரு நாளும் பகல் பல்லக்கு, இரவு கருட, ஹம்ச, ஹனுமந்த, ஷேச,  யானை குதிரை வானகம் மற்றும் புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்வான  விழாவின் 9-ம் நாளான இன்று திருத்தேர் வடம்பிடித்தல் காலை நடைபெற்றது. 
 
முன்னதாக உற்சவ பெருமாளுக்கு யாகம், சிறப்பு ஆராதானை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு ரதபிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான பக்த கோடிகள் ஒன்றுகூடி திருத்தேரினை இழுத்தனர். திருத்தேரானது கடைவீதி, பஜனைமடம், ஆண்டார் மெயின்ரோடு மற்றும் அக்ரஹாரம்  வழியாக பக்தகோடிகள் படைசூழ வடம்பிடித்து இழுக்கப்பட்டு திருக்கோவிலினை வந்தடைந்து. வழிநெடுங்கிலும் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை  செய்து வழிபட்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்