இலவச தமிழ் வழி ஜப்பானிய மொழி வகுப்பு! நான் முதல்வன் திட்டத்தில் அறிவிப்பு! - விண்ணப்பிப்பது எப்படி?

Prasanth Karthick
புதன், 9 அக்டோபர் 2024 (10:10 IST)

தமிழ் வழியில் ஜப்பானிய மொழியை இலவசமாக கற்றுக் கொள்வதற்கான வகுப்புகள் நான் முதல்வன் திட்டம் மூலமாக தொடங்கப்படுகிறது.

 

 

தமிழக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் இளைஞர்கள், மாணவர்களின் திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைக்கான பல பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் ஜப்பானிய மொழியை இலவசமாக கற்றுக் கொள்வதற்கான வகுப்பை நான் முதல்வன் திட்டத்தில் அறிவித்துள்ளனர்.

 

இந்த இலவச ஜப்பானிய மொழி வகுப்பு தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வாரத்தின் 5 நாட்களில் தினசரி 2 மணி நேரம் நேரடி வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் சென்னை, சேலம், கோவை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த பயிற்சி வகுப்பின் காலகட்டம் 3 மாதங்கள் ஆகும்.

 

இந்த திட்டத்தின் கீழ் இலவச ஜப்பானிய மொழி பயில அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜப்பானிய வகுப்புகள் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்