சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.. எத்தனை நாட்கள்?

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (10:22 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பிரதோஷம் நாட்களில் விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் இந்த  மாதமும் அமாவாசை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை மறுநாள் அதாவது மே ஐந்தாம் தேதி முதல் மே 8ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதோஷம் அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் கோவிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கோவிலுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்