இமாச்சலப் பிரதேச வெள்ளத்தில் துனாக் வங்கி மூழ்கிய நிலையில் அவ்வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள துனாக் நகரில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கி, தினந்தோறும் வணிகர்கள் உட்பட பல வாடிக்கையாளர்கள் தங்கள் வருவாயை டெபாசிட் செய்துள்ளன.ர் மேலும் மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை, பணம், ஆவணங்கள் மற்றும் நகைகளாக டெபாசிட் செய்தும் லாக்கரிலும் வைத்துள்ளனர்,.
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தைப் புரட்டி போட்ட மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தில்வங்கி கட்டிடத்தின் முதல் தளம் முழுவதும் நீர் மற்றும் குப்பைகளால் நிரம்பியுள்ளது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், ஒரு பக்க ஷட்டர் வேரோடு பிடுங்கப்பட்டதுடன், மற்ற இரண்டு ஷட்டர்களும் வளைந்து போயின.