வத்திராயிருப்ப அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் மொட்டை எடுத்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.