வெள்ளியங்கிரி மலையேறிய இன்னொரு பக்தர் பலி.. இந்த ஆண்டு மட்டும் 9 பேர் உயிரிழப்பு..!

Siva

திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:34 IST)
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஏறும் பக்தர்கள் சிலர் அவ்வப்போது உயிரிழந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பக்தர் உயிர் இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அருகே உள்ள தென் கயிலாலயம் என்று  அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்வதற்காக ஏழுமலை தாண்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். ஏழு மலைகள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாக சென்று தரிசனம் செய்ய வலியுறுத்தி வரும் நிலையில் முழு உடல் சோதனை செய்த பிறகு மலை ஏற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது புண்ணியகோடி என்பவர் தனது நண்பர்களுடன் மலையேறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறியவர்கள் எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இன்னொரு உயிரிழந்ததால் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளியங்கிரி மலைக்கு உடல்நிலை குறைவானவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா மூச்சுத்திணறல் நோய் உள்ளவர்கள் ஏறக்கூடாது என்று வனத்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்