யாருடைய இச்சைக்காக நிர்மலா தேவி பெண்களை அழைத்தார்? முத்தரசன். பளீர் கேள்வி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (19:24 IST)
பேராசிரியை நிர்மலா தேவி யாருடைய இச்சைக்காக பெண்களை அழைத்தார் என்றும், அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுப்பது யார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன். கேள்வி எழுப்பியுள்ளார் 


 
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், 
15 லட்சம் போடுவதாக சொன்ன வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அமைப்பு ரீதியாக அரசியல் ரீதியாக பலம் பொருந்திய கட்சிகள் ஒரணியில் இணைந்துள்ளோம்.அந்த பலம் அவர்களுக்கு  (அதிமுக பாஜக)  இல்லை.. பொங்கலுக்கு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மோடி , பழனிச்சாமி எதிர்பார்ப்பு . ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தாது. பாஜக அதிமுக இரண்டும் பணம் கொடுக்க பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மோடி சட்டப்பூர்வமாக பணம் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். மிக மிக நவீனமான தெனாலிராமன் மோடி. பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் என்ன நடக்கிறது அவருக்கு ஜாமீன் மறுக்கபடுவது ஏன். அவர் யாருடைய இச்சைக்காக பெண்களை அழைத்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்குத் அந்த பலம் படைத்த மனிதர் யார்?  இவ்வாறு முத்தரசன் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்