அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணையில் நிர்மலா தேவி இந்து சமய அறநிலையத்துறை, நகைக்கடை அதிபர், காண்டிராக்டர், துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருடன் உல்லாசமாக இருந்தாக தெரிவித்திருந்தார். மேலும் பல முக்கியப் புள்ளிகளின் பெயர்களையும் அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று அவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் வெளியே வந்த கருப்பசாமியிடம், நிர்மலா தேவி கூறிய பாலியல் புகார் குறித்தும் அவரை மூலைச்சலவை செய்ததாகவும் கூறப்பட்ட புகார் குறித்தும் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி ஒரு 50 வயது கிழவி, அவருக்கு நல்லது கெட்டது தெரியாதா? அவருடன் போய் நான் எப்படி தவறாக நடந்திருக்க முடியும் என கேட்டார். விரைவில் தன் பக்கம் நியாயம் வெளியே வரும் என கூறிவிட்டு சென்றார்.