ஆளுநர் பெயரைச் சொன்னது இதற்காகத்தான் ! நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்...

புதன், 31 அக்டோபர் 2018 (20:20 IST)
தமிழகத்தில் கல்லூரியில் படிக்கும் மாணிவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக  பேராசிரியை நிர்மலா தேவி போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாணவிகளை நிர்மலா தேவி எந்த முக்கியமான மேலதிகாரிகளுக்காக இந்த செயலில் இறங்கினார் என்பது குறித்து போலீஸார்  விசாரித்த் வந்தனர்.ஆனால் இதுவரை வளியே தெரியப்படாமல் இருந்த உண்மைகள் தற்போது தெரியத்துவங்கியுள்ளன.
 
சி.பி.சி.ஐ.டி.போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நிர்மலாதேவி கூறியுள்ளதாவது:
 
கடந்த மார்ச் 13 ஆம்தேதி தான் காமராஜ் பல்கலைகழகத்திற்கு சென்றதாகவும் அப்போது நடந்த அறிவியல் கண்காட்சியை பார்க்க ஆளுநர் வருவதை அறிந்து கொண்டதும் ஆளுநரை பார்ப்பது இதுதான் முதன்முறையாதலால் அவர் கண்காட்சியை  திறந்து வைப்பதை என் அலைபேசியில் படம் பிடித்தேன்.அந்த வீடியோவை பலருக்கும் பகிரவும் செய்தேன். 
 
அதனை தொடர்ந்து நான்கு மாணவிகள் ஒன்றாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அனுப்பி இருந்த வீடியோவால் எனக்கு செல்வாக்கு உள்ளது என அவர்கள் நினைத்திருப்பார்கள் என கருதி அவர்களிடம் பேசினேன் .
மேலும் தான் பேசும் போது அதிகாரிகள் என கூறியது துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரையும் தான் எனவும் கூறியுள்ளார்.
 
அவர்கள் கொஞ்சம் எதிர்பார்க்கிறார்கள் என கூறியது முருகன் ,கருப்பசாமி ஆகியோர் கல்லூரி மாணவிகள் வேண்டுமெனக் கேடுக்கொண்டதனால் இவ்வாறு பேசினதாக நிர்மலாதேவி கூறியுள்ளார்.பேச்சின் உரையாடலில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை மறுபடி புரியவிவைப்பதற்காகத்தான் ஆளுநர் தாத்தா என  மாணவிகளிடம் கூறியதாகவும் அவர் சி.பி.சி.ஐடிபோலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.
 
இந்த வழக்கில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் வாய்ப்புள்ளதாகவும் பரபலாகப் பேசப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்