தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:59 IST)
கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 
 
இதனால் தமிழகத்திலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி கொடைக்கானல் நகராட்சியில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். இது தமிழகத்திலே முதன்முறையாக நடந்துள்ள சாதனையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று அனைத்துப்பகுதி மக்களும் பாதுகாப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவை ஒழிக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்