24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 நாட்களுக்கு கனமழை..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (08:17 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம் பகுதி உருவாகிறது என்றும், இதனை அடுத்து தமிழகம் புதுச்சேரியில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்க கடலில் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் என்றும் இதனால் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது என்பதும், அதனால் சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியு உள்ள நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு மழை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்