பட்டாசு ஆலை விபத்து - 11 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:24 IST)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
 
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்து செலுத்தும் போது வேதிப்பொருள் உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகிறது. 
 
சம்பவ இடத்தில் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்