வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர்

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:18 IST)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

 
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் முதல் கட்டமாக உரிமையாளர் மாரியப்பபை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் காயம் அடைந்தோர்க்கு ரூ.50000 நிவாரணம்  அறிவித்து விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது, முதல்வர் பழனிசாமி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல்  தெரிவித்ததுடன்  தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும்,  அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்