தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 வயதாகும் அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது . இதையடுத்து அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில் அவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.