’ தனுஷ்’ பாடலுக்கு நடனம் ஆடிய தீயணைப்புத்துறையினர் …

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (17:28 IST)
’ தனுஷ்’ பாடலுக்கு நடனம் ஆடிய தீயணைப்புத்துறையினர் …

உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதான முதியவர் உயிரிழந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி உலகம் முழுவதும் 15,296 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அரசு உத்தரவை மீறி வெளியே சென்றல் அவர்களின் பாஸ்போர்ட்  முடக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் பல 144 தடை உத்தரவு விதித்திருந்த நிலையில் தமிழகத்திலும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடை, மருந்து கடை உள்ளிட்டவற்றை தவிர்த்து அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து நடமாடவும் தடை விதிக்கப்படும்.

நாளை மாலை அதிகாரப்பூர்வமாக வரும் இந்த உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற வரியா… வரியா என்ற பாடலுக்கு தமிழக தீயணைப்புத் துறையினர் ஆடினர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்