கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் பரிந்துரை என்ன? மருத்து விவரம் உள்ளே...

திங்கள், 23 மார்ச் 2020 (15:49 IST)
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளது மத்திய அரசு. 
 
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN ஆகிய இரண்டு மருந்துகளை கொரோனாவை தடுப்பதற்கான மருந்துகளாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ப்ரிந்துரை செய்துள்ளார். 
 
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளது மத்திய அரசு. மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரை செய்துள்ளது. 
 
ஏற்கனவே இந்த மருந்தை அமெரிக்கா பரிந்துரைத்த நிலையில் இந்தியாவும் இதே முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்