கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து!!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (19:15 IST)
இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கும் பொறுப்பேற்றுள்ள பிரபலமான சீரம் நிறுவனத்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, மத்தியர அரசு கொரோனா கால ஊரடங்கை அறிவித்தது. ஏழு மாதங்களை கடந்த நிலையில் ஓரளவு தொற்றும் கொரோனா இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த நிலையில், இந்தியாவில் பிரசித்தி பெற்ற சீரம் என்ற நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகள் பெறுவதாக அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறிவனத்த்ல் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இப்போது தீ கட்டுக்குள்கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  ஆனால் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பு மருந்தை கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்