கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 600 பேருக்கு உடல்நலக் குறைவு !

வியாழன், 21 ஜனவரி 2021 (13:12 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 600 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 


 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் முன்கள பணியாளர்களே சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் தெரிவிப்பதால் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், மக்கள் தடுப்பூசி கண்டு அஞ்ச வேண்டாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
 
இதனிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 600 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் இரண்டு பேர் மரணித்துள்ளனர். இருந்தாலும், சர்வதேச அளவில் இது மிகக் குறைவு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்