தந்தை . கண்முன்னே மாணவி தற்கொலை

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (19:48 IST)
திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வந்த மாணவி இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜ் சாலையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு திருப்பூரை அடுத்த படியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகள் ஆனந்தி என்பவர் பயிற்சி எடுத்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் ஆனந்தி பயிற்சி  மையத்திற்கு வந்துள்ளார், அவரைக் காண்பதற்கு அவரது காதலர் வந்துள்ளார். அப்போது, தன் மகளைப் பார்க்க வந்த மணிகண்டனுக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவே, கண்டித்திருக்கிறார்.

இதனால், வேதனையடைந்த மாணவி, தனியார் பயிற்சி மையத்தின் 3 வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்