குடிபோதையில் தந்தை பிரச்சனை…தீக்குளித்த தாய்…பதறவைக்கும் சம்பவம்

Webdunia
சனி, 30 மே 2020 (22:53 IST)
கொரொனா காலத்தில் மதுபான விற்பனை இல்லாத நிலையில்  பெரும்பாலான பிரச்சனைகள் வராத நிலையில், தற்போது மதுகுடித்துவிட்டு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார்.  இவர் கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடை திறந்த போது , அங்குச் சென்று மதுவாங்கி குடித்துவிட்டு  வீட்டுக்கு வந்து மனைவி பரமேஸ்வரி மற்றும் மகள் அர்ச்சரான்வ்சிடம் பிரச்சனை செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதில், மனமுடைந்த இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தனர். அப்போது அவர்களை அருகில் உள்ளவர்களை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி கடந்த வாரம் உயிரிழந்தா நிலையில் இன்று அவரது மகள் அர்ச்சனாவும் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்