சென்னையில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (12:42 IST)
சென்னையில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் 5 வயது மகளை குளிக்க வைப்பதாக தந்தை அழைத்து சென்ற நிலையில் அவர், தான் பெற்ற மகளுக்கே பாலியல் தொ​ல்லை அளித்துள்ளார். இதனை, கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி, குழந்தையிடம் விசாரித்ததில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
 
சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தநிலையில் தந்தையை கைது செய்து போக்சோவில் வழக்குபதிந்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பொதுவாக பெண் குழந்தைகள் மீது தந்தை பாசமாக இருப்பார் என்று கூறப்படும் நிலையில் தான் பெற்ற பெண் குழந்தைக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்