பெண்களை பாதுகாக்க வேண்டியது தயாரிப்பாளர், இயக்குநர் பொறுப்பு: ராதிகா

Siva

திங்கள், 2 செப்டம்பர் 2024 (17:50 IST)
பெண்களை பாதுகாக்க வேண்டியது தயாரிப்பாளர், இயக்குநர் பொறுப்பு என ராதிகா பேட்டி அளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில் மலையாள திரை உலகத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ராதிகா சமீபத்தில் கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசிக்கின்றனர் என்று திடுக்கிடும் தகவலை கூறினார்.

இந்த நிலையில் தமிழ் திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ராதிகா கூறிய நிலையில் அது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

எங்கேயோ ஒரு இடத்தில் தவறுகள் நடக்கும். என்னுடைய வாழ்க்கையில் வந்த எல்லாப் பிரச்சினைகளையும் நான் தனியாக நான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறோம்.

80களில் இருந்து பார்க்கிறேன், எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இது போன்று இருக்கிறது. யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. தமிழ் திரையுலகில் பெண்களை பாதுகாக்க வேண்டியது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உடைய பொறுப்பு. பெண்களுக்கென தனி கழிவறை , உடை மாற்றும் அறை உள்ளிட்டவை இருக்க வேண்டும்


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்