வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:03 IST)
சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி. இவர் கோவையில் உள்ள இந்தியா வங்கி முன்பு இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பால் பண்ணை வைப்பதற்க்காக நண்பர்கள்  மூவருடன் சேர்ந்து இந்தியன் வங்கியில் பூபதி என்பவர் கடன் வாங்கியுள்ளார்.
 
இந்நிலையில் பால் பண்ணை லாபகரமாக இயங்காததால்  அவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்தினால்தான் பத்திரம் கொடுக்க முடியும் என வங்கி தரப்பில் கறாராக கூறியதாகக் கூறப்படுகிறது. 
 
மேலும் பால் பண்ணைக்காக நண்பர்கள் வாங்கிய  கடனையும் சேர்ந்து செலுத்துமாறு,  வங்கி தரப்பினர் அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில் இன்று கோவையில் உள்ள இந்தியன்   வங்கி வெளியே விவசாயி பூபதி தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்