குஜராத் வெள்ளத்தில் ஊருக்குள் புகுந்த முதலைகள் – குலைநடுங்க செய்யும் வீடியோ

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:01 IST)
குஜராத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் முதலைகள் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் பார்ப்பவரை கதிகலங்க செய்துள்ளன.

வடமாநிலங்களில் பெயத கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின் வடோதரா பகுதிகளில் வெள்ளநீர் மொத்த நகரத்தையும் மூழ்கடித்துள்ளது. இதனால் ஆற்றுப்பகுதியில் இருந்த முதலைகள் வெள்ளநீரில் பயணித்து ஊருக்குள் புகுந்து விட்டன.

முதலைகளை பார்த்த மக்கள் தண்ணீரில் இறங்க பயந்து கொண்டு வீட்டிலேயே இருக்கின்றனர். சிலர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் நிலை குறித்து பகிர்ந்துள்ளனர்.

அதில் ஒரு வீடியோவில் தண்ணீரில் இரண்டு நாய்கள் அங்குள்ள தெருப்பகுதியில் வெள்ளநீரில் சுற்றி திரிகின்றன. அந்த பக்கமாக வந்த குட்டி முதலை ஒன்று மெல்ல நெருங்கி நாயை கடிக்கிறது. அந்த நாய் கத்திக்கொண்டே அந்த பக்கமாக ஓடுகிறது.

மற்றொரு வீடியோவில் ராட்சத முதலை ஒன்று இரவில் நகரின் பிரதான சாலை பகுதியில் நடந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோக்கள் காண்பவர்களை கதி கலங்க செய்வதாய் உள்ளது. பலர் இந்த வீடியோக்களை ஷேர் செய்து அவர்களுக்கு உடனடி உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்