போலி வீடியோ விவகாரம்: மணீஷ் காஷ்யப் நீதிமன்றத்தில் ஆஜர்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (11:52 IST)
தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் கடந்த 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
தொடர்ந்து 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி நீதிபதி இல்லத்தில் மணிஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது பீகாரை சேர்ந்த யூடியூபர் மனீஷ் காஷ்யப்பை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
இதில் மனீஷ் காஷ்யப் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தராததால்  7 நாள் போலீஸ் காவல் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி நீதிமன்றம் விடுமுறை என்பதால் மனு மீதான விசாரணையை இன்று நீதிபதி டீலா பானு ஒத்தி வைத்தார்.
 
இந்நிலையில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்று விசாரணை நடத்த உள்ளார். இந்நிலையில் பீகாரை சேர்ந்த யூடியூபர் மணீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். யூடியூபர் மணீஷ் காஷ்யப்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்