ஒரே நாளில் 2பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தமிழக மக்கள் அதிர்ச்சி..!

புதன், 5 ஏப்ரல் 2023 (11:03 IST)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் கலந்து சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார் என்றும் அதேபோல் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் நேற்று கொரோனாவுக்கு பலியானதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தைச் சேர்ந்த 96 சதவீதம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்றும் அதனால் பொதுமக்கள் பதட்டம் அடைய தேவை இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்