கல்லூரி மாணவியுடன் திருமணமான பேராசிரியர் தலைமறைவு.. போலீசார் தேடுதல் வேட்டை..!

புதன், 5 ஏப்ரல் 2023 (08:21 IST)
திருமணமான பேராசிரியருடன் கல்லூரி மாணவி ஒருவர் தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பி.எட் படிக்கும் மாணவி ஒருவருக்கும் அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பேராசிரியர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற போதிலும் கல்லூரி மாணவி அவரை காதலித்து உள்ளார் என்பதும் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திருமணம் ஆன பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவரும் திடீரென தலைமறைவாகியுள்ளதால் கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைமறைவாகியுள்ள பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவரும் கோவையில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து போலீசார் கோவை விரைந்துள்ளதாகவும் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் தென்காசி அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
திருமணம் ஆன பேராசிரியருடன் கல்லூரி மாணவி ஒருவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்