யூடியூப் வீடியோவை பார்த்து கள்ளநோட்டு அடித்த கும்பல் கைது

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:48 IST)
யூடியூப் வீடியோ தளத்தில் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டி கிடக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல் யூடியூப் வீடியோவை பார்த்து கள்ளநோட்டு அடித்த கும்பலை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் பிளாஸ்டிக் தொழிலை செய்து வந்தார். தொழிலில் அவருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை அதிகமாகியது. இதனையடுத்து சுகுமாரின் நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவின்படி கள்ளநோட்டு அடிக்க முடிவு செய்தார். இதற்காக லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின் உள்பட ஒருசில உபகரணங்களை வாங்கிய சுகுமார், மாணவர் ஒருவரை சிறைபிடித்து அவருடைய உதவியால் கள்ளநோட்டு அடிக்க தொடங்கினர்.

உயிர்ப்பயம் காரணமாக கள்ளநோட்டு அடிக்க ஒப்புக்கொண்ட அந்த மாணவர், சுகுமார் அசந்தநேரம் பார்த்து காவல்துறைக்கு போன் செய்தார். போன் மூலம் தகவல் அறிந்த போலீசார் செல்போனின் டவரை வைத்து கள்ளநோட்டு அடிக்கும் இடத்தை கண்டுபிடித்து கள்ளநோட்டு அடித்துகொண்டிருந்த பெண் உள்பட 4 பேர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுகுமாரிடம் விசாரணை செய்தபோது ரூ.4 கோடி வரை கள்ளநோட்டு அடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நால்வரையும் சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்