ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதா? முதல்வர் பழனிச்சாமியின் கணக்கு என்ன?

வியாழன், 20 செப்டம்பர் 2018 (20:06 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் காவலர் நிறைவாழ்வு பயிற்சியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி காவலர்களின் அழுத்தத்தை குறைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில்  டிஜிபி ராஜேந்திரன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பின்வருமாறு, ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார். நமது காவல்துறை எல்லா காலங்களிலும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் நிலைநாட்டுவதிலும் சிறப்பாக செயல்படுகிறது. 
 
தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை காவல்துறை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், நீங்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். தமிழகத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என பேசினார். 
 
சமீபத்தில், எச்.ராஜா மற்றும் கருணாஸ் போலீஸாரை கடுமையாக தாக்கி பேசிய அனைத்தையும் கவனித்துக்கொண்டதான் இருக்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தெவித்துள்ளார் எனவே விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சூசகமாக கூறியுள்ளார் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்