மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (15:51 IST)
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது .இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை உயர்கல்விக்காக மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்பெற உள்ள மாணவிகள் ஜூன் 30ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது;.
 
இந்த நிலையில் தற்போது ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்