அரசு அலுவலகத்தில் வைத்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை

Webdunia
சனி, 5 மே 2018 (12:45 IST)
வேலூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் கவுன்சிலரான மகேந்திரன் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வேலை விஷயமாக இன்று வந்தார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த மர்ம நபர்கள் மகேந்திரனை வெட்டிப் படுகொலை செய்தனர்.
 
விஷயமறிந்து சம்பவ இட்த்திற்கு விரைந்த போலீஸார், மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்