அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Siva

ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (14:16 IST)
அத்தை, சித்தி, பெரியம்மா போன்ற உறவுக்கார பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை, அவரது தாய் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த 35 வயது  பிரசாத் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது நெருங்கிய உறவினர்களான அத்தைகள், சித்தி, பெரியம்மா மற்றும் சில பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட பிரசாத்தின் தாய், "இப்படிப்பட்ட மகன் எனக்கு தேவையே இல்லை" என முடிவு செய்து, மகன் தூங்கிக் கொண்டிருக்கும்போது கோடாரியால் தாக்கி கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே பிரசாத் உயிரிழந்தார்.

அதன் பிறகு, அவர் தனது உறவினர்களின் உதவியுடன் மகனை துண்டுகளாக வெட்டி, சாக்குமூட்டையில் கட்டி, கால்வாயில் வீசிவிட்டார்.

இது தொடர்பாக தகவல் கிடைத்து போலீசார், பிரசாத்தின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை மீட்டு, தலைமறைவாக உள்ள அவரது தாய் மற்றும் உறவினர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்