ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாத நிலையில், அந்த கட்சிகளின் வாக்குகள் என்ன ஆனது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஏற்கனவே, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்றார். அதன் பின்னர், அதிமுக 41,400 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகள், தேமுதிக 1,400 வாக்குகள் பெற்றன.
இந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக வேட்பாளர் 37 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு 7,600 வாக்குகள் கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகள் பெற்றது. இந்த முறையும் அதே வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால், அதிமுக, பாஜக, தேமுதிக வாக்குகள் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முடிவு முழுமையாக வெளியான பிறகு, திமுக வேட்பாளர் பெறும் வாக்குகளின் வித்தியாசத்தை பொருத்து, இந்த கட்சிகளின் வாக்குகள் எப்படி மாறின என்பது தெரியும்.