இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியே வந்த ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தில் சேர இருப்பதாகவும் அவருக்கு மாநில அளவில் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவிலிருந்தும் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நிர்மல் குமாருக்கு தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை போல் பேச்சாளர் ராஜ்மோகன் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.