பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை பேசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.
தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.