ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, பாஜக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் புறக்கணித்திருந்தன. இதனால், ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய முன்னிலை நிலவரப்படி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 489 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 5,000-க்கு மேல் அதிகமாக உள்ளது.